பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை.!

83பார்த்தது
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை.!
பரமக்குடி அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 12 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் வனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தக் கல்லூரியில் இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ள மாணவிகளுக்கு வருகிற 12-ஆம் தேதி கணினி அறிவியல், ஆங்கிலம், 13-ஆம் தேதி வணிகவியல், பொருளாதாரம், 14-ஆம் தேதி தமிழ், தொழில் நிா்வாகத் துறை ஆகிய இளநிலை பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவிகள் இணையதளத்தின் விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ் அசல், நகல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும். கணினி அறிவியல் பாடப் பிரிவுக்கு ரூ. 1, 485, மற்ற அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் ரூ. 2, 365 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றாா் அவா்.

தொடர்புடைய செய்தி