

பரமக்குடி: மணல் திருட்டில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ்
பரமக்குடி மணல் திருட்டில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் மணல் திருடிய குணா (எ) சிவக்குமார் மீது பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு எஸ். பி. சந்தீஷ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்