ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்த இருளாண்டி மகன் உத்திரகுமார், இவர் வக்கீலுக்கு படித்துள்ளார். இவர் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று இரவு தனது வீட்டில் இருந்து சகோதரி ஜோதிமணி வீட்டிற்கு நடந்து சென்ற போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உத்தரகுமாரை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உத்திரகுமார் உயிரிழந்தார். உயிரிழந்த உத்திரகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரியில் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொழிலதிபர் பழனிச்சாமி என்பவரை கொலை செய்த வழக்கில் உத்திரகுமார் குற்றவாளி என்பதும், இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த உத்திரகுமார் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். ஒரு எஸ்ஐ தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பரமக்குடியில் இளைஞரின் முகத்தை சிதைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளை கைது செய்ய கோரி அவர்களின் உறவினர்கள் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்