

இலங்கைக்கு கடத்த முயன்ற 2. 8 டன் விராலி மஞ்சள் பறிமுதல்
ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சத்திரக்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த சரக்கு வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய பொழுது குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். பின்பு வாகனத்தை சோதனை செய்த பொழுது ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையலுக்கு பயன்படுத்தும் விராலி மஞ்சள் இருந்தது. இந்த மஞ்சள் மூடைகளையும் சரக்கு வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.