ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிர பாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்த இருளாண்டி மகன் உத்திரகுமார், இவர் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவரது சகோதரி வீடும் உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு தனது வீட்டில் இருந்து சகோதரி வீட்டிற்கு நடந்து சென்ற போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உத்திரக்குமாரை சரமாரியாக வெட்டி வெட்டியுள்ளது.
இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உத்திரக்குமார் உயிரிழந்தார்.
இறந்த உத்திரக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொழிலதிபர் பழனிச்சாமி என்பவரை கொலை செய்த வழக்கில் உத்திரகுமார் முதல் குற்றவாளி என்பதும், இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த உத்திரகுமார் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் பழனிசாமிக்கும், உத்திரகுமாருக்கும் ரியல் எஸ்டேட் துறையில் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சென்னையில் பழனிச்சாமியை உத்திரகுமார் தரப்பினர் வெட்டி கொலை செய்தனர். இந்த நிலையில் பழனிச்சாமி தரப்பினர் பழிவாங்கும் விதமாக உத்திரகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.