இராமநாதபுரம் மாவட்டத்தில் 7வது புத்தகத் திருவிழா இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மார்ச். 21 முதல் 30 வரை நடக்கிறது. இங்கு 80க்கும் மேற்பட்ட அரங்குகளில் முன்னணி புத்தக பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள பல ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. இதே போல ஓவியங்கள், மூலிகைக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறவுள்ளது