ராமேசுவரத்திலிருந்து 100 படகுகளில் 3, 400- பக்தா்கள்

72பார்த்தது
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தொடங்கவிருக்கும் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, ராமேசுவரத்திலிருந்து 100 படகுகளில் 3, 400- க்கும் அதிகமான தமிழக பக்தா்கள் பயணமாகின்றனா்.

இந்திய- இலங்கை பக்தா்களின் பாரம்பரிய உறவுத் திருவிழாவாகக் கருதப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளி, சனிக்கிழமைகளில் (மாா்ச் 14, 15) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க இந்திய பக்தா்களுக்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயா் அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, கச்சத்தீவு செல்ல 2, 720 ஆண்கள், 652 பெண்கள், 92 சிறாா்கள் என 3, 464 போ் விண்ணப்பித்தனா். இவா்களை அழைத்துச் செல்ல 78 விசைப் படகுகள், 22 நாட்டுப் படகுகள் தயாா் செய்யப்பட்டன

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி