கடலாடி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று மாலை அரை மணி நேரத்திற்கும் மேலாக திடீரென மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கடந்த சில தினங்களாக கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் உப்பு காற்றுடன் சேர்ந்து அனல் காற்று வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் இன்று பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்