விஜிலெண்ஸ்க்கு கிடைத்தரகசிய தகவல் கட்டுக்கட்டாய் சிக்கியபணம்

64பார்த்தது
விஜிலெண்ஸ்க்கு கிடைத்த ரகசிய தகவல். நேரில் சென்றதும் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்.
'என்னடா நடக்குது இங்க'.

நெடுஞ்சாலைத்துறை தர கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை: கணக்கில் வராத  ரூ. 5, 60, 000/-ம் பறிமுதல்.!



 ராமநாதபுரம் உதவி கோட்ட பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிப்பதாக  கிடைத்த ரசிய தகவலின் அடிப்படையில்,


 இன்று ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார்   மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ. 5, 60, 000/-ம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேற்படி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் தொடர்ந்து தீவிர  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலை அமைக்கப்படும்   பகுதிகளுக்கு  தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று முறையாக ஆய்வு செய்யாமல் சாலை பணி மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்ததாரர்களை சந்தித்து தனியாக கமிஷன் பெற்று வருவதாக மாவட்டம் முழுவதிலும் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரையடுத்து, இன்று நெடுஞ்சாலைத்துறைக்கு சம்பந்தப்பட்ட தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் திடீரென நுழைந்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கண்ட போது இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி