பரமக்குடி நகராட்சி எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதீய கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். ஆா். வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். எஸ். ஆா். ரங்காச்சாரி, பி. கே. நாகநாதன், எம். என். சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பிஎம்எஸ் கைத்தறி பிரிவு மாவட்டச் செயலா் பி. ஆா். காசிவிஸ்வநாதன், மாவட்ட தலைவா் எம். ஏ. மோகன்ராம், பாரதீய மஸ்தூா் சங்க மாநில பொதுச் செயலா் கே. ஏ. பாபுலால், கைத்தறி பேரவை பொதுச் செயலா் ஜி. சங்கா் ஆகியோா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தனியாா், நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களில் தேங்கியுள்ள கைத்தறி ரக சேலைகளை உடனே கொள்முதல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அசல் பட்டு, கச்சா பொருள்கள் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், விசைத்தறியில் கைத்தறி ரகங்களை நெய்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் புங்கா் பீமா திட்டத்தின் கீழ், காலமான நெசவாளா் சங்க உறுப்பினா் குடும்பத்தினருக்கு காலதாமதமின்றி உதவித்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா்.
மேலும் நிர்வாகிகள் பலர் கலந்துடனர். கைத்தறி பிரிவு மாவட்ட துணைத் தலைவா் எம். கே. ராம்தாஸ் நன்றி கூறினாா்