ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்த இருளாண்டி மகன் உத்திரகுமார், இவர் வக்கீலுக்கு படித்துள்ளார். இவர் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் (04. 03. 25)இரவு தனது வீட்டில் இருந்து சகோதரி ஜோதிமணி வீட்டிற்கு நடந்து சென்ற போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உத்திரக்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உத்திரக்குமார் உயிரிழந்தார். உயிரிழந்த உத்திரக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறவினருடன் ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
ஒரு எஸ்ஐ தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பரமக்குடியில் இளைஞரின் முகத்தை சிதைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை தேடிய பொழுது ராமநாதபுரம் பகுதியில் பதுங்கி இருந்த பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்த தீனதயாளன், அப்துல் கலாம், கிரண் ஆகிய மூன்று இளைஞர்களை 24 மணி நேரத்தில் கைது செய்து பரமக்குடி நகர் போலீசார்கள் தொடர் விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக கொலை செய்துள்ளதாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.