அசுத்தமாக காட்சி அளிக்கும் அக்னி தீர்த்தம் பேருந்து நிறுத்தம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு தங்களுடைய உடைகளை கடலில் விட்டு செல்வது வழக்கம். அதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்படுகிறது. ஆனால் தற்போது பக்தர்கள் விட்டு செல்லும் உடைகள் அனைத்தும் மூட்டையாக கட்டி அக்னி தீர்த்தம் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டுள்ளதால் அசுத்தமாக காட்சி அளிக்கின்றது.