முதுகுளத்தூர் - Mudukulathur

ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமுதாய வளைகாப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமூக நலத்துறை சார்பில் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு 100 பெண்களுக்கும் ஆசிர்வாதம் செய்து தமிழக அரசின் சார்பில் வளையல், குங்குமம், சேலை, அனைத்துவகை பழங்களுடன் கொண்ட எவர்சில்வர் பேழை அனைவருக்கும் வழங்கினார்.  பின்னர் கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித்ஜிங் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


இராமநாதபுரம்