கடலாடி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு.!

69பார்த்தது
கடலாடி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு.!
கடலாடி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு நடைபெற்ற குடமுழுக்கு

முன்னதாக முதல் கால யாகசால பூஜைகளுடன் சனிக்கிழமை இந்த விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், கோ மாதா பூஜை, பூரணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம், மூன்றறாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றறன. பின்னர் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க மங்கள இசை வாத்தியங்களுடன் கும்பம் கோயிலில் வலம் வரச் செய்யப்பட்டு கோபுரக் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றறது. அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பத்திரகாளியம்மன், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றறன.

இந்த குடமுழுக்கு விழாவில் கடலாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றறது. விழா ஏற்பாடுகளை கடலாடி சத்திரிய நாடார் உறறவின்முறைற நிர்வாகிகள் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி