கமுதி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் கொலை: இளைஞர் கைது..!

71பார்த்தது
கமுதி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் கொலை: இளைஞர் கைது..!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி செட்டியார் பஜாரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கண்ணன் (50). இவர் கமுதி அருகேயுள்ள கே. பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், கோடை விடுமுறைற முடிந்து, பள்ளிக்கு திங்கள்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை வழிமறித்த மர்மக் கும்பல் ஆசிரியர் கண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்றற கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, கண்ணனின் உடலை மீட்டு, கமுதி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட கண்ணனுக்கு சங்கீதா (42) என்றற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில், கமுதி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மண்டலமாணிக்கம் அருகேயுள்ள இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுகேந்திரன் மகன் பாலமுருகனை (22) கைது செய்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி