திருமயம் அருகே கடன் தொல்லை வாலிபர் தற்கொலை
திருமயம் அருகே உள்ளஇருதயபுரத்தைச் சேர்ந்த கதிர்வேலு மகன் முருகானந்தம் (21). இவர் திருமயத்தில் உள்ள சோடா கம்பெனியில் பணிபுரிந்தார். இவர் கடனில் தவணைக்கு பைக் ஒன்றை வாங்கியிருந்தார். அதற்குச் சரியாக தவணை கட்ட இயலவில்லை. பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தீபாவளி நேரத்தில் சிரமமாக உள்ளது என தாயார் திட்டியதால் மனமுடைந்த முருகானந்தம் நேற்றிரவு (அக்.,18) வீட்டருகே உள்ள மரத்தில் தூக்குமாட்டி இறந்தார். திருமயம் எஸ். ஐ. நந்தகுமார் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.