புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த பி. அழகாபுரி கிராமத்தை சேர்ந்த ராமையா மனைவி பஞ்சு, நேற்று காலை அங்குள்ள குளத்தில் குளிக்கச் சென்றார். அப்போது நிலை தடுமாறிய குளத்தில் விழுந்து இறந்து விட்டார். அவரது உடலை மீட்ட திருமயம் காவல்துறையினர் உடல் கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.