புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் உள்ளிட்ட 5 கிராமங்களில் மழை பெய்யாத காரணத்தினால் விவசாய இன்சூரன்ஸ் பணம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டத்தை அறிவித்தனர். இந்நிலையில் கோட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் 5 கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இழப்பீடு விரைந்து வாங்கி தரப்படும் என உறுதி அளித்தார் கோட்டாட்சியர்.