திருமயம்: லேனாவிளக்கு பகுதிகளில் நாற்று நடும் பணி தீவிரம்!

65பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்துள்ள லேனாவிளக்கு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் மண் ஈரப்பதம், நாற்று நடுவதற்கு தேவையான தண்ணீர் அளவு இருப்பதனால் நாற்று நடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கண்மாய்கள் கிணறுகள் பாதி அளவிற்கு மேல் கொள்ளளவு கொண்டுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி