புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் இருந்து ஏம்பல் செல்லும் வழியில் உள்ள போச்சப்பட்டியில் நேற்று பெய்த மழையின் காரணமாக பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் பள்ளியில் உள்ள தோரண வாய்க்கால் மூலம் அங்குள்ள குலத்திற்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளதால் மழை நீர் பள்ளியில் நுழைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் தேங்கி கிடக்கும் நீரை வெளியேற்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர்