புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூர் வட்டார மருத்துவ சுகாதார அலுவலகத்தில் 24 மணி நேரத்தில் 5 பெண்களுக்கு சுயபிரசவம் ஆகியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில்காரையூர் வட்டார மருத்துவ குழுவினரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.