புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மணவாளன்கரையில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையை ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரண்யா சரவணன் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.