புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ந. புதூரில் முழு நேர நியாய விலை கட்டடத்தை திறந்து வைத்த பின் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, நாங்கள் சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம், யாரும் செய்ய முடியாததையும் செய்வோம் என்று கூறினார். மகளிர் உரிமை தொகை யாரும் செய்ய முடியாது என சொன்னார்கள். ஆனால் ஒவ்வொரு மாநிலமும் தமிழகத்தை பின்பற்றி செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று அவர் பேசினார்.