உடல்நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நலமுடன் உள்ளார் என்றும், உடல்நிலை குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறோம் எனவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்று கூறிய அவர் தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக கூறினார்.