ரஜினிகாந்த் நேற்று (செப். 30) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திகைச் செல்வன் வெளியிட்ட தகவலில், “ரஜினி உடல்நிலை சீராக இருப்பதாக அவர் மனைவி லதா தெரிவித்தார். அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. பிரபல இதய மருத்துவரான சாய் சதீஷ், ரஜினிகாந்துக்கு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளார்” என்றார்.