தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில், புதன்கிழமை நடைபெற்ற பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றல் கற்பித்தலில் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த புத்தொளிப் பயிற்சி தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் கல்வியை ஆங்கிலத்தில் படித்தாலும் கூட ஆய்வுக் கட்டுரைகளையும், ஆய்வறிக்கைகளையும் ஆங்கிலத்துடன் தமிழிலும் சமர்பிக்க வேண்டும்.
மேலும், மீன் வளச் சுடர் என்கிற பல்கலைக்கழக இதழில் மீனவர்களுக்கும், மீன் வளர்ப்போருக்கும் பயன்படும் விதமாக ஆய்வுக்கட்டுரைகள் தமிழில் வெளியிடப்படுகிறது. இத்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீனவர்களும், மீன் வளர்ப்போரும் நடைமுறைப்படுத்தி பயன்பெறுகின்றனர்.
இதன் மூலம் மீன் உற்பத்தி உயர்ந்து மீனவர்களுக்கும், மீன் வளர்ப்போருக்கும் லாபம் அதிகரித்துள்ளது" என்றார் பெலிக்ஸ். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தார். முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் வாழ்த்திப் பேசினார். பதிவாளர் (பொ), தியாகராஜன் வரவேற்றார்.