கந்தர்வகோட்டையில் இளம்பெண் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, வீரடி பட்டியை சேர்ந்த சௌமியா (20). இவருக்கு திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆகிறது. வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவரது விவசாய பண்ணை வீட்டில் விவசாயத்திற்கு பயன்படும் பூச்சி மருந்தை குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.