புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கொத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (54) இவர் நெடுங்காலமாக வயிற்று வலியால் அவதியுற்று உள்ளார். 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி மயங்கி கிடந்துள்ளார். உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.