புதுக்கோட்டை: மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் படுகாயம்

53பார்த்தது
புதுக்கோட்டை நரிமேடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 17வது பிளாக்கில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் (கிஷோர்) பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளான். அடுக்குமாடி குடியிருப்பில் பச்சை நிறங்களில் உள்ள பிளாக்குகளுக்கும், வெள்ளை நிறத்தில் உள்ள பிளாக்குகளுக்கும் மொட்டை மாடியில் உள்ள கேப்பில் பாதுகாப்பு ஏற்படுத்தியில் குளறுபடி உள்ளது. பச்சை மாடி அடுக்குமாடி குடியிருப்பில் மொட்டை மாடியில் இருந்து கீழே யாரும் விழாத வகையில் கம்பிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளை நிறத்தில் உள்ள பிளாக்குகளில் இந்த வசதி இல்லாத காரணத்தினால் தற்பொழுது சிறுவன் மேலிருந்து கீழே நேரடியாக விழுந்துள்ளான். இது அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி