கறம்பக்குடி அருகே மாமியார் மருமகளை கத்தியை காட்டி மிரட்டி கட்டி போட்டு வாயில் துணி வைத்து அடைத்து வீட்டிலிருந்த 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களால் பரபரப்பு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பச்சநாயகுளம் அருகே ஐயப்பன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முகமுடி அணிந்திருந்த மர்ம நபர்கள் அந்த வீட்டில் இருந்த ஐயப்பனின் மனைவி தங்கலெட்சுமி மற்றும் ஐயப்பனின் தாயார் பாக்கியலட்சுமி ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி அவர்களை கட்டிப்போட்டு வாயில் துணி வைத்து அடைத்து வீட்டிலிருந்த 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஐயப்பன் சிங்கப்பூரில் உள்ள நிலையில் இந்த சம்பவம் அரங்கேரி உள்ளது. மேலும் இது குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.