புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கண்ணகி தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி இவரது மகள் ரேணுகா 18, புதுகையில் அன்னை நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். கடந்த மாதம் 29 ஆம் தேதி இன்ஸ்டிட்யூட் செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. பின்னர், அவரது தந்தை அழகர்சாமி நேற்று(அக்.4) அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் விசாரித்தனர்.