கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தில் பாக்யஸ்ரீ என்ற பெண் தனது மகனை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிடச் சென்றுள்ளார். பள்ளி வாகனம் வந்து நின்றதும் அதன் மேல் உயர் மின்னழுத்த கம்பி உரசியுள்ளது. இதனை கவனிக்காத சிறுவன் வாகனத்தை தொட்டவுடன் மின்சாரம் பாய்ந்துள்ளது. சிறுவனை பிடித்திருந்த பாக்யஸ்ரீ மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாகனத்தில் இருந்த 11 மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.