ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் இந்தாண்டும் பிரியாணிதான் முதலிடம் பிடித்துள்ளது. இதுகுறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2024-ம் ஆண்டில் 8.3 கோடி பிரியாணி ஆர்டர்கள் குவிந்துள்ளன. 1 விநாடிக்கு 2-க்கும் மேற்பட்ட பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹைதராபாத்தில் 90 லட்சம், பெங்களூருவில் 70 லட்சம், சென்னையில் 40 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.