2025-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காளைகளுக்கு தேவையற்ற வலி, துன்பம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், முன் அனுமதி பெறாதவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கூடாது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், அரசு அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் போன்ற விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.