தெலுங்கானா: அடிலாபாத் மாவட்டம், சோனாலா கிராமத்தில் ஒரு முட்டையில் 2 கோழி குஞ்சுகள் பொறிந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் தவ்பிக் என்பவர் வளர்த்து வந்த கோழி ஒரு முட்டைகளை அடைகாத்து வந்தது. அடைகாக்கப்பட்ட முட்டையில் இருந்து நேற்று டிச.23 2 கோழிக்குஞ்சுகள் வந்தது. 2 கோழிக்குஞ்சுகளும் தற்போது நலமாக உள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை மருத்துவர் ஒருவர், மரபணு குறைபாடு காரணமாக ஒரே முட்டையில் 2 கோழி குஞ்சுகள் பொறித்துள்ளது என்று கூறியுள்ளார்.