காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பேரிடர் மேலாண்மை துறையில் பயணிக்கும் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவிக்காக ஹெல்மெட், லைஃப் ஜாக்கெட், கிளவுஸ், ஷீ உள்ளிட்ட தலா ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பேக்கை இன்று (செப்.1) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முனைவர் மணிகண்டன் தலைமையில் இதில் பயணிக்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பேரிடர் மேலாண்மை துறை துணை ஆட்சியர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.