காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது மகளை நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விடுவதற்காக மோட்டார் சைக்களில் அழைத்து சென்றார். திரு. பட்டினம் புதிய பாலம் அருகே சென்றபோது. அதிவேகமாக வந்த தனியார் பள்ளி வேன் மோட்டார் சைக்களில் மோதியதில், கோவிந்தராஜ் அதே இடத்தில், தலையில் பலத்த காயமுற்று உயிருக்கு போராடி உயிரிழந்தார். அவரது மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திரு. பட்டினம் போக்குவரத்து போலீசார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனியார் பள்ளி வேன் டிரைவர் மாதவானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.