நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு!

67பார்த்தது
நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு!
சென்னையை சேர்ந்தவர் கலையரசி (58). தனது மகளை பார்க்க ஆஸ்திரேலியா சென்ற இவர், அங்கிருந்து இந்தியாவிற்கு வர விமானம் மூலம் கோலாலம்பூர் வந்து அங்கிருந்து சென்னைக்கு மற்றொரு விமானம் எறியுள்ளார். விமானம் நேற்று (அக் 06) இரவு சென்னை வந்துள்ளது. அப்போது விமானத்தில் மயக்கமடைந்து கிடந்த அவரை மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி