தொட்டியம்: ஆசிரியர் அடித்ததில் மாணவனுக்கு கை எலும்பு முறிவு
தொட்டியம் அருகே உள்ள பாப்பப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜடமங்கலத்தை சேர்ந்த செல்வராஜ் கோகிலா தம்பதியினரின் மகன் ஜெகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று(நவ.22) பள்ளி வளாகத்தில் மாடியில் உள்ள வகுப்பறையை கூட்டி சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தவறுதலாக துடைப்பக் குச்சிகள் கட்டில் இருந்து உருவியதில் கீழே இருந்த தலைமை ஆசிரியரின் காரின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியர் ஜெகனை தாக்கியதில் அவருடைய கையெலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் தொட்டியம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர்.