தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச். ராஜா மீது சென்னை விமான நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலவரத்தை உண்டாக்கும் விதமாக பேசியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குறித்து அவதூறாகப் பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.