துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ஹேமலதா முத்து செல்வம் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி டாப்சங்காட்டுப்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் சாலையில் சிமெண்ட் சாலை அமைத்தல் பச்சபெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு மின் உபகரணங்கள் மற்றும் பிளம்பிங் உபகரணங்கள் பொருத்துதல் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.