துறையூர் பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை விழுந்து இளைஞர் காயம்

79பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் கடையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் இளைஞர் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை பேருந்து நிலையத்திற்குள் உள்ள ஒரு சலூன் கடையின் வெளிப்புற மேற்கூரை அதிக அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது இதில் கடை வாசலில் சலூனில் வேலை பார்க்கும் ரவிக்குமார் என்பவர் நாற்காலியில் உட்கார்ந்து இருந்த போது அவரது தலையில் திடீரென சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் காயம் ஏற்பட்டது. உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை செய்தனர். மேலும் அவ்வழியாக குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலரும் வந்து செல்லும் இடத்தில் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதே போன்று பேருந்து நிலையத்திற்குள் உள்ள பல கடைகளில் சிமெண்ட் கூரைகள் பெயர்ந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால் பலரும் அச்சத்திலேயே இருந்து வரும் சூழலும் ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி இத்தகைய விபத்துக்கள் பேருந்து நிலைய கடைகளில் ஏற்படுவதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி