திருப்பத்தூர் மாவட்டம் பாரண்டப்பள்ளியில் 300க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோயிலில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படும். திருவிழா நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன், கிராம மக்கள் ஒன்று கூடி தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு ஊரை காலி செய்துகொண்டு வனப்பகுதியில் ஒரு இடத்தில் கூடுவார்கள். அங்கு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு மாலையில் ஊர் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.