அண்ணல் அம்பேத்கர் சாம்பியன்ஸ் திட்டத்தில் தொழில் முனைவோர்கள் அவர்கள் துவங்கவுள்ள புதிய தொழில்களுக்கு ஏற்ப அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற அதிகபட்ச வயது வரம்பு 55 வரை இருக்க வேண்டும். புதிய தொழில் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். ரூ.5 கோடிக்கு கடன் பெற்றால் ரூ.1.5 கோடி வரை மானியம் கிடைக்கும். www.msmeonline.tn.gov.in என்ற இணைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.