திருச்சி: சாலை விபத்தில் பசுமாடு உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பசுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் பசுமாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது. பலமுறை ஊராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மாட்டின் உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கின்றனர். எனவே நெடுஞ்சாலையில் மாடுகள் மேய விடுவதை தடுக்க ஊராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.