கேரளாவின் கண்ணூர் தளிப்பரம்பில் உள்ள விடுதியின் கழிவறையில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். லூர்து செவிலியர் கல்லூரியில் படித்து வந்த திருச்சூரைச் சேர்ந்த மாணவி ஆன் மரியா என்பவர் கல்லூரிக்கு விடுமுறை எடுத்து அறையிலேயே இருந்துள்ளார். நேற்று (நவ., 22) மாலை விடுதிக்கு வந்த மாணவிகள், கழிப்பறையில் ஆன் மரியா சடலமாக கிடப்பதைக் கண்டு அலறியுள்ளனர். மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.