பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தில் போடப்பட்டு வரும் தார்ச் சாலையை அகலப்படுத்தி. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை கால்வாய்களுடன் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர். மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 பேர் மாவட்ட /ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கடந்த மாதம் தமிழ்நாடு
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தங்கள் பகுதியில் சாலை அமைப்பதற்காக பூமி பூஜையை போட்டு பணிகளை துவக்கி வைத்தார். அந்த சாலை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை கால்வாய்களுடன் அமைக்கப்படாமல், சிறிய சந்து போல குறுகலாக அமைக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை கால்வாய் வசதியுடன் அகலமான சாலை அமைத்து தர வேண்டும் என்று தங்களது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.