திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பூ வியாபாரி முருகேசன். இவருக்கு சொந்தமாக வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக குடியிருக்காமல் பூட்டி கிடக்கிறது. முருகேசனின் உறவினர் ரவிச்சந்திரன் பராமரித்து வருகிறார். இந்நிலையில், ஆளில்லாத வீட்டிற்கு ரூ.7,46,001 மின்கட்டணம் செலுத்தும்படி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் மின்வாரிய அலுவலகத்தில் கேட்டார். அப்போது, தவறுதலாக அனுப்பப்பட்டதாகவும், கட்டணம் செலுத்த தேவையில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.