ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல கடைசி நேரத்தில் மறுத்ததால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம்,“போராட்டத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் அவகாசத்தை 10 நாட்களாத நீட்டிக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். 5 நாட்களில் இருந்து 10 நாட்களாக நீட்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் தொண்டு வர வேண்டும்” என அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.