மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக, நித்தியானந்தாவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் உள்ளார் என தமிழக அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்சினையாக இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.